

கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் பைக்கிற்கு வழிவிட முயன்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கண்டறை அருகே உள்ள சாலையில் இன்று மதியம் அம்பாசிடர் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 2 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், ஆற்றோரம் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த சாலையில் பைக் வந்துள்ளது. இதைப்பார்த்த கார் டிரைவர் பைக்கிற்கு வழிவிடு காரை ஆற்றின் கரையோரம் இறக்கியுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காரில் இருந்த இருவரை லேசான காயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று ஆறுக்குள் விழுந்த காரை கிரேன் மூலம் மீட்டனர். பைக்கிற்கு வழிவிட முயன்றபோது ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.