சீரழியும் சட்டம் ஒழுங்கு, தூங்கி கொண்டிருக்கும் தூயசக்தி தவெக அரசு - நயினார் நாகேந்திரன்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதவி விலகிவிடுவது நல்லது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சீரழியும் சட்டம் ஒழுங்கு, தூங்கி கொண்டிருக்கும் தூயசக்தி தவெக அரசு - நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

சீரழியும் சட்டம் ஒழுங்கு, தூங்கி கொண்டிருக்கும் தூயசக்தி தவெக அரசு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

நிர்வாக தோல்வி

நேற்றைய தினம் ஊர் உலகமே தீபாவளி பண்டிகைக்காக விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், தேனி, மானாமதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 9 கொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. கொலையானவர்களில் ஒரு காவல் சிறப்பு உதவி ஆய்வாளரும் அடக்கம் என்பது முதல்-அமைச்சர் விஜய்யின் நிர்வாக தோல்விக்கான அப்பட்டமான சான்று.

ரோந்து பணிகள்

பண்டிகை தினங்களில் மது புழக்கம் அதிகரிக்கும், அதனால் வன்முறைகள் நிகழ வாய்ப்புள்ளன என்பதை ஒரு நல்ல அரசு முன்கூட்டியே யூகித்திருக்க வேண்டும். ரோந்து பணிகளையும், கண்காணிப்பு பணிகளையும் பலப்படுத்தியிருக்க வேண்டும்.

வன்முறைகள் குறையுமா?

ஆனால், பொதுமக்களை போலவே ஆட்சியாளர்களும் தீபாவளிக்கு விடுமுறை எடுத்து கொண்டு வீட்டில் முடங்கிவிட்டால், அரசு இயந்திரம் எப்படி முறையாக இயங்கும்? அதிலும் சட்டம் ஒழுங்கை தனது நேரடி கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பொதுமேடையில் ‘வேடிக்கை, மகிழ்ச்சி என பகிரங்கமாக போதை பழக்கத்தை ஊக்குவித்தால், வன்முறைகள் குறையுமா?

பதவி விலகிவிடுவது நல்லது

எனவே தான் நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம், ஆட்சி நடத்த தெரியவில்லை என்றால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதவி விலகிவிடுவது நல்லது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X