மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
Published on

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 3-ந்தேதி (இன்று) காலை 10.30 மணியளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com