சிவந்தி ஆதித்தனாரின் அயரா உழைப்பையும், நிர்வாகத் திறனையும் போற்றுவோம்: அன்புமணி புகழாரம்

தினத்தந்தி குழுமத்தின் மறைந்த தலைவர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை
தினத்தந்தி குழுமத்தின் மறைந்த தலைவர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காகவும், இதழியல் அறத்தைக் காக்கவும் அவர் ஆற்றிய பணிகள் ஏராளம்... ஏராளம். விளையாட்டு அமைப்புகளையும், இதழியல் நிறுவனங்களையும் வளர்த்தெடுப்பதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நிர்வாகப் பாடங்கள். அவை அனைத்தும் போற்றத்தக்கவை. எந்த நோக்கங்களுக்காக அவர் தமது உழைப்பை வழங்கி, கொடையளித்தாரோ அந்த நோக்கங்கள் நிறைவேறுவதற்காக கடுமையாக உழைக்க அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம்.
Related Tags :
Next Story






