குழந்தைகளின் உலகில் அச்சமும், கவலையும் நுழையாமல் பாதுகாப்போம்: அன்புமணி ராமதாஸ்

குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளையும், பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Published on: 

சென்னை,

குழந்தைகள் கொண்டாட்டம், மகிழ்ச்சியின் ஊற்றுகள்; அவர்களின் உலகில் அச்சமும், கவலையும் நுழையாமல் பாதுகாப்போம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று நேருவின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது நினைவைப் போற்றி, மரியாதை செலுத்தி வருகின்றனர்.

குழந்தைகள் தினம்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

இந்த நிலையில் குழந்தைகள் தினத்தையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

உலகில் மாயங்களை நிகழ்த்தும் மந்திரக்கோல் எதுவும் இல்லை. ஆனால், மீளவே முடியாத சோகம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து மனிதர்களை ஒற்றைச் சிரிப்பிலிருந்து மீட்டெடுக்கும் மாயங்களை நிகழ்த்தும் வலிமை குழந்தைகளுக்கு உண்டு. அவர்கள் கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி ஆகியவற்றின் ஊற்றுகள். எதுவுமே இல்லாவிட்டாலும் கூட, குழந்தைகள் மட்டும் இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடும். பல நேரங்களில் குழந்தைகள் தாயாகவும், தந்தையாகவும் கூட நம்மை அரவணைப்பவர்கள். அவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாளில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்

வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகளின் உலகம் அச்சமில்லாமல், மகிழ்ச்சி நிறைந்ததாக தொடருவதை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. அவர்களுக்கான அனைத்து உரிமைகளையும், பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X