யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேலும் இதுகுறித்து கூறுகையில், யானைகள் தந்தங்களுக்காக கடத்தப்படுவது, சர்வதேச சந்தையாக வளர்ந்துள்ளது. தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது ஏற்கத்தக்கதல்ல. யானைகளை பாதுகாப்பது நமது கடமை. யானைகள் மரணம் தொடர்பாக கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யானைகள் மரணத்தில் வெளி மாநிலத்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. வெளிமாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com