மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று சரிபார்ப்பு

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 'விவிபேட்' கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இன்று நடக்கிறது.

இடைத்தேர்தல்

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு 16-ந்தேதி கடைசி நாளாகும்.

சரிபார்க்கும் பணி

இந்த தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் தாங்கள் செலுத்திய வாக்கினை உறுதி செய்யும் 'விவிபேட்' கருவிகள் தயார் நிலையில் உள்ளன. இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று (சனிக்கிழமை) தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரால் மேற்கொள்ளப்படுகிறது.

தொகுதி வாரியாக ஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து, தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படும். பின்னர் அவை தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்த பின்னர், அவர்களது பெயர் மற்றும் விவரங்களுடன் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com