தமிழகத்தை பயங்கரவாதத்தின் புகலிடமாக்கிய திமுக அரசு - நயினார் நாகேந்திரன்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்வது மலினமானது என்பதை திமுக அரசு உணர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிடுவதோடு, பயங்கரவாதிகளுக்கு உளவு பார்த்து வந்த வங்கதேசத்தவர்கள் ஆறு பேரை திருப்பூரில் டெல்லி காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Also Read
நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் - அதிர்ச்சி சம்பவம்
கோப்புப்படம்

தொடர்ந்து திருப்பூர், கோவை போன்ற கொங்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கியிருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதையும், பின் தேசியப் புலனாய்வு முகமை மற்றும் பிற மாநிலக் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதையும் உற்று நோக்கையில், திமுக அரசின் ஏவல்துறையினர் தேசப் பாதுகாப்பில் மெத்தனம் காட்டி வருவது தெளிவாகப் புலனாகிறது.

Also Read
காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்

மத்திய அரசின் மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்வது மலினமானது என்பதை திமுக அரசு உணர வேண்டும்! ஆட்சியின் இறுதிகட்ட நாட்களிலாவது தமிழகத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வெளிக்கொணர்ந்து, தேச நலனைக் காக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com