

இராணிப்பேட்டை,
இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் விற்பனை சரிவை நோக்கி செல்வதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பெருமாளை வழிபடும் பொதுமக்கள் மற்றும் மாலை அணிந்து கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அசைவ உணவுகளைத் தவிர்க்கின்றனர்.
இதன் காரணமாக மீன், சிக்கன், மட்டன் விற்பனை பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று இராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் வழக்கத்தைவிட பொதுமக்கள் வருகை குறைந்து காணப்பட்டது.
இதனால் கடைகள் வெறிச்சோடியதுடன், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட இறைச்சிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.