தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு ஊடக சக்கரவர்த்தி விருது: தோரணமலை கோவில் நிர்வாகம் வழங்கியது

தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு ஊடக சக்கரவர்த்தி விருது- தோரணமலை கோவில் நிர்வாகம் வழங்கியது.
Published on

திருச்செந்தூர்,

தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் ஊடக சக்கரவர்த்தி விருது வழங்கப்பட்டது.

பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்த நாள் இன்று (செப்.24) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு விருது

தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரும், தோரணமலை முருகன் கோவில் பக்தர்களும், தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனை சந்தித்து அவருக்கு ஊடக சக்கரவர்த்தி விருதினை வழங்கி பாராட்டினார்கள். தோரணமலை முருகன் கோவில் பிரசாதமும் அவருக்கு வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com