மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று, தென்மேற்குப் பருவமழை தயார்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற தென்மேற்கு பருவமழை ஆயத்த நிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில், வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை தவறாது பின்பற்றவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நேற்று பெய்த மழை காரணமாக கே ஆர் பி நீர்த்தேக்கம் மற்றும் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 4,200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார்.

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் 24 மணி நேரமும் இயங்கி வரும் அவசர அழைப்பு மையத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைக் கேட்டறிந்த அமைச்சர், புகார்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, புகார் அளித்தவர்களுக்கு எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com