

திருச்சி,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் திருச்சியில் இன்று திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேச உள்ளார். மாநாட்டில் திமுக நிர்வாகிகள் 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்கும் திமுக நிர்வாகிகளுக்காக மதிய உணவு முழு வீச்சில் தயாராகி வருகிறது. மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு அசைவத்தில் கமகமக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 ஆகிய உணவுகள் தயாராகி வருகிறது. அதன்படி, 10 லட்சம் பேருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மட்டன், 80 ஆயிரம் கிலோ சிக்கன் மூலம் உணவு தயாரிக்கப்படுகிறது. சைவத்திலும் உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.