தமிழக செய்திகள்
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துகள் - கமல்ஹாசன்
எளியோரின் கண்ணீரை துடைக்கும் கருணைதான் உண்மையான தொண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வந்த நிலையில், ரம்ஜான் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாக பிறை சந்திரன் நேற்றிரவு தெரிந்தது. இதைத் தொடர்ந்து இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளபதிவில் கூறி இருப்பதாவது:-
பசித்த வயிறுகளுக்கு உணவளித்து, எளியோரின் கண்ணீரைத் துடைக்கும் கருணைதான் உண்மையான தொண்டு என்பதை உணர்த்தும் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

