

நெல்லை,
தெற்கு ரெயில்வே சார்பில் 8 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அதி விரைவு ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி ரெயில்களின் எண்களும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இதில் நாகர்கோவிலில் இருந்து நெல்லை, திருச்சி, அரக்கோணம், ரேணிகுண்டா வழியாக மும்பை எல்.டி.டி இடையே வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும் ரெயிலும் இடம் பெற்றுள்ளது.
அதாவது மும்பை எல்.டி.டி நிலையத்தில் இருந்து (திங்கள், வெள்ளிக்கிழமை) இரவு 8.55 மணிக்கு புறப்படும் ரெயில் எண் 16351 என்பது 20615 என மாற்றப்பட்டு உள்ளது. சூப்பர் பாஸ்ட் ரெயில் மற்றும் ரெயில் எண் மாற்றம் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து (ஞாயிறு, வியாழக்கிழமை) காலை 6.15 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 8 மணிக்கு வந்து செல்லும் ரெயில் எண் 16352 என்பது 20616 என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சூப்பர் பாஸ்ட் மற்றும் ரெயில் எண் மாற்றம் ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.