நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை


நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை
x

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). இவர் வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென தனது மகள்களான பிரக்திஷாஸ்ரீ(9), ரித்திகாஸ்ரீ(7), தேவஸ்ரீ(3) ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொைல செய்துள்ளார். இதனையடுத்து அவர் விஷம்குடித்து தற்கொலை செய்துள்ளார். கடன் பிரச்சினை காரணமாக தந்தையே தனது 3 மகள்களை வெட்டிக் கொன்றுவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவர் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story