நெல்லை: அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டது

வனத்துறையினர் வைத்த கூண்டில் ஆண் கரடி சிக்கியது.
நெல்லை: அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டது
Published on

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆண் கரடி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. சங்கரபாண்டியபுரம் பகுதியில் கடந்த ஓராண்டாக கரடி நடமாட்டம் அதிகரித்த நிலையில், சமீபத்தில் ஒருவரை தாக்கி காயப்படுத்தியது.

இதையடுத்து, வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதனை தொடர்ந்து, வனத்துறையினர் வைத்த கூண்டில் ஆண் கரடி சிக்கியது. இதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் வந்து கரடியை பரிசோதித்தனர். அதன் பின்னர் முண்டந்துறை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். அப்பகுதியில் கரடியின் நடமாட்டம் உள்ளதால், அதனையும் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com