இளநிலை உதவியாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் காசோலை: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்கினார்

திருநெல்வேலி மாநகர காவல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த சுந்தரராஜ் என்பவர் பணியின்போது கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
இளநிலை உதவியாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் காசோலை: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்கினார்
Published on

திருநெல்வேலி மாநகர காவல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த சுந்தரராஜ் என்பவர் பணியின்போது கடந்த 7.12.2025 அன்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஆயுள் காப்பீடாக வங்கியில் இருந்து உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகை ரூ.15 லட்சத்திற்கான காசோலையை நேற்று, திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், சுந்தரராஜின் குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சின்போது நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) மற்றும் வங்கி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com