பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடங்கள்

பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடங்கள்
Published on

விருதுநகர் யூனியன் பெரிய பேராலி கிராம பஞ்சாயத்தில் ரூ.15 லட்சம் செலவில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் சமையல் கூடங்கள் மற்றும் குளியல் தொட்டியை சீனிவாசன் எம். எல்.ஏ. திறந்து வைத்தார். இதேபோன்று பாவாலி கிராம பஞ்சாயத்தில் ரூ.22 லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் ஆகியவற்றை சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், யூனியன் கவுன்சிலர்கள் திவ்யா ராம்குமார், ரவிச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர்கள் பெரிய பேராலி முத்துலட்சுமி முருகேசன், பாவாலி அழகம்மாள் மகாலிங்கம், யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், கற்பகவல்லி மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com