ரூ.38 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள்

செய்யாறு தொகுதியில் ரூ.38 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ரூ.38 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள்
Published on

செய்யாறு

செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெங்கட்ராயன் பேட்டை, திருப்பனமூர் ஆகிய கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்.10 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு தலைவர்கள் மாமண்டூர் டி.ராஜி, திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனுவாசன், தினகரன், சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் பிரியா நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, பிரகாஷ், சத்யா பக்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com