கருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ.வின் மனு தள்ளுபடி..!!

என்.ஐ.ஏ. மனுவை பரிசீலித்த பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ.வின் மனு தள்ளுபடி..!!
Published on

பூந்தமல்லி,

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய சம்பவத்தில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் கருக்கா வினோத்திற்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என கருதி இந்த வழக்கு என்.ஐ.ஏ. போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் கருக்கா வினோத்தை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு அளித்திருந்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் கருக்கா வினோத்தை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். விசாரித்த நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பொங்கல் விடுமுறை தினங்கள் முடிந்த பிறகு கருக்கா வினோத்தை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை அளிக்க உள்ளதாகவும் என்ன காரணங்களுக்காக போலீஸ் காவலில் விசாரிக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மீண்டும் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com