நீலகிரி: குடியிருப்பு பகுதியில் கரடி உலா - மக்கள் அச்சம்

கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: குடியிருப்பு பகுதியில் கரடி உலா - மக்கள் அச்சம்
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் கோத்தகிரி போலீஸ் நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு கரடி ஒன்று உலா வந்தது. இதை கண்ட போலீசார் கரடியை விரட்டினர். பின்னர் அந்த கரடி எதிரே இருந்த அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கிருந்து புதருக்குள் ஓடி சென்று மறைந்தது.

இதேபோல கோத்தகிரி காந்தி மைதானம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கரடி நடமாடியது. மைதானம் அருகே உள்ள டீ கடையின் கதவை 2-வது முறையாக உடைத்தது. அங்கிருந்த எண்ணெய்யை குடித்து விட்டு சென்றது. நகரின் முக்கிய பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com