நீலகிரி: குடியிருப்பில் சுற்றித்திரியும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு

குன்னூர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி சுற்றித்திரிந்து வருகிறது.
நீலகிரி: குடியிருப்பில் சுற்றித்திரியும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு
Published on

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு, உணவு பற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களால் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும், பிரச்சினையின் தீவிரம் குறையாமல் உள்ளது.

குன்னூர் அடுத்த அம்பிகாபுரம் பகுதியில் தற்போது பேரி, ஆரஞ்ச் கொய்யா போன்ற பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்த பழங்களை ருசி பார்க்க வனப்பகுதியில் இருந்து கரடிகள் இரவு, பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று அம்பிகாபுரம் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கரடி, பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியில் அங்கும், இங்கும் உலா வந்தது. இந்த கரடியை கடந்த 2 நாட்களாக வனத்துறையினர் விரட்டிய போதும், மீண்டும் அதே பகுதிக்கு கரடி வருகிறது. குடியிருப்பு பகுதியில் கரடி சுற்றித்திரிந்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கரடி நடமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதனால் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இருந்தபோதிலும், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அன்றாட பணிக்கு செல்வோர் அந்த வழியாக செல்ல முடியாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, கரடியை பிடிக்கும் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com