எடப்பாடி அருகே சோகம் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

எடப்பாடி அருகே சோகம் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
எடப்பாடி அருகே சோகம் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
Published on

எடப்பாடி

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம் கோணசமுத்திரம் கிராமத்தில் சேவிபட்டி காலனி உள்ளது. இங்கு வசித்து வருபவர் கந்தசாமி. இவருடைய மனைவி காளியம்மாள் (வயது 65). இவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து கடும் வலியால் அவதிப்பட்டு வந்த காளியம்மாள் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காளியம்மாளின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் இறப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com