மூதாட்டி தற்கொலை

சாணார்பட்டி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டி தற்கொலை
Published on

சாணார்பட்டி அருகே உள்ள மந்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 60). இவர், நீண்ட காலமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com