தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டியில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
Published on

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி செங்கல்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர்கள் 2 பேரும் அங்குள்ள தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பழனியம்மாள் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com