கனகம்மாசத்திரம் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பெண் சிசு பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை

கனகம்மாசத்திரம் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பெண் சிசு பிணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனகம்மாசத்திரம் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பெண் சிசு பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை
Published on

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்த முத்துக்கொண்டாபுரம் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் பிறந்து ஒரு நாள் மட்டுமே ஆன பெண் சிசு இறந்த நிலையில் துணி பையில் பிணமாக இருந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com