மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு: கர்நாடகாவை நோக்கி விவசாயிகள் பேரணி

விவசாயிகள் போராட்டத்தை அடுத்து போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
விவசாயிகள்
கோப்பு படம்
Published on

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டி, அங்குள்ள நீரை தங்களது மாநில பாசன தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணை கட்டும் திட் டத்தை கைவிட வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மாதாந்திர நீர் பங்கீட்டை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும், மேலும் இரு மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ராசிமணல் பகுதியில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேகதாது பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது.

வேனில் புறப்பட்ட விவசாயிகள்

அதன்படி நேற்று காலை தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சை பெரிய கோவில் முன்பு அமைந்துள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து வாகன பேர ணியை தொடங்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் தலைவர் திருப்பதி, துணைத்தலைவர் கிருஷ்ணமணி, துணை செயலாளர் சுவாமிநாதன் மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

பேரணி

திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி வழியாக ஓசூர் சென்றனர். ஓசூர் மூக்கண்ட பள்ளியில் கர்நாடகாவை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். மேகதாது அணைக்கு எதிராக கோஷங்களையும் விவசாயிகள் எழுப்பினர். விவசாயிகள் போராட்டத்தை அடுத்து போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com