கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ்நகர் கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ்நகர் கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்த செல்லையா மகன் செண்பகராஜ் (வயது 52). பெயிண்டரான இவர், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள கடையின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கீழே தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து அவருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com