தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் கோவில்களில் பழனி கோவில் முதலிடம்!

முதல் 10 கோவில்களின் மொத்த ஆண்டு வருவாய் ரூ.941.99 கோடியாக உள்ளது.
பழனி
Published on: 

சென்னை,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அதிக வருமானம் ஈட்டும் கோவில்களின் பட்டியலில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த கோவிலின் ஆண்டு வருவாய் ரூ.233.50 கோடியாகும்.

பழனி கோவில்

தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 கோவில்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் ரூ.233.50 கோடி வருவாயுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 கோவில்களின் மொத்த ஆண்டு வருவாய் ரூ.941.99 கோடியாக உள்ளது.

பக்தர்களுக்கான வசதிகள் மேம்பாடு

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களுக்கு வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடுகள், அன்னதானத் திட்டங்கள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவில்களின் வருவாய் இத்தகைய பணிகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com