பயணிகள் கோரிக்கை ஏற்பு: தாம்பரம் - போடிநாயக்கனூர் சிறப்பு ரெயில் நீட்டிப்பு

தாம்பரம் - போடிநாயக்கனூர் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சிறப்பு ரெயில் நீட்டிப்பு
Published on

சென்னை,

தாம்பரம் - போடிநாயக்கனூர் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரெயில் சேவையை கூடுதலாக நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாம்பரம் - போடிநாயக்கனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ரெயிலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட நிலையில், தற்போது இந்த கோரிக்கையை தெற்கு ரெயில்வே ஏற்று 4 சேவைகளை கூடுதலாக அளிக்க முன்வந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறப்பு ரெயில் நீட்டிப்பு

தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்கு சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06059) சேவை ஜூலை 4 முதல் ஜூலை 25-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதாவது, 4 சேவை கூடுதலாக வழங்கப்படுகிறது. இதேபோல், மறுமார்க்கத்தில் போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில் (06060) ஜூலை 5-ந் தேதி முதல் ஜூலை 26-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் - போடிநாயக்கனூர் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com