சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது

தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது
Published on

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பின்படி, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து கடந்த 28 நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது ரூ.99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com