பெட்ரோல் பங்க் ஊழியர், சுடுகாட்டில் பிணமாக மீட்பு

திண்டிவனத்தில் மாயமான பெட்ரோல் பங்க் ஊழியர், சுடுகாட்டில் பிணமாக மீட்கப்பட்டது.
பெட்ரோல் பங்க் ஊழியர், சுடுகாட்டில் பிணமாக மீட்பு
Published on

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் எட்டியான்(வயது 51). இவர் திண்டிவனம் திருவள்ளுவர் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 2-ந் தேதி வேலைக்கு சென்ற இவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான எட்டியானை தேடி வந்தனர். இந்த நிலையில் திருவள்ளுவர் நகரில் உள்ள சுடுகாட்டில் எட்டியான் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com