சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்
Published on

தூத்துக்குடி,

சாத்தான்குளம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்களாக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகிய 4 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். மற்றெரு காவலரான முத்துராஜை பேலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைதான 5 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com