உடற்பயிற்சி செய்த பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தினமும் பள்ளி முடிந்ததும் மாணவர் முகமது பாகிம், தர்கா வளாகத்தில் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.
உடற்பயிற்சி செய்த பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் முகமது பாகிம் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தினமும் பள்ளி முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள தர்கா வளாகத்தில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று உடற்பயிற்சி செய்த முகமது பாகிம், திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவரின் திடீர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com