பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்த்துகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com