

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. 18 தொகுதிகள் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை தியாகராயர் நகர், திலக் தெருவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (01.04.2026) அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
* குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2000
* தனியார் மற்றும் அரசு துறையில் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு
* வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000
* கல்விக்கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* பட்ஜெட்டில் 25% வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கப்படும்
* தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு
* 125 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட்டு, விவசாய பணிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* சாதிவாரி கணக்கெடுப்பு
* 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி
* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமாவது விலக்கு பெற பா.ம.க. தொடர்ந்து போராடும்.
* தமிழ்நாட்டின் 2-வது தலைநகரம் திருச்சி
* ரூ.10க்கு சோறு, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், ஊறுகாய் உடன் நிறைவான மதிய உணவு
* ஞாயிறு அன்று ரூ.25க்கு அசைவ மதிய உணவு வழங்க 'மக்கள் உணவுத் திட்டம்' தொடங்கப்படும்.
* ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2கிலோ நாட்டு சர்க்கரை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.