அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறாது; சவுமியா அன்புமணி

மது, போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என்று சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்
சவுமியா அன்புமணி
Published on: 

சென்னை மீனம்பாக்கத்தில் தனியார் நட்சத்திர விடுதி யில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பசுமைத் தாயகம் தலைவரும், சட்டமன்ற பா.ம.க. குழுத் தலைவரு மான சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறியதா வது:- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பி, பெண்களை அதிக அளவில் போலீஸ் துறையில் சேர்க்க வேண்டும். ஊர்க்காவல் படையினருக்கும் அனைத்து நாட்களும் பணி வழங்க வேண்டும்.

மது, போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத் தாயகம் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்நிலைகள் பாதுகாப்புக் காக போராடி வருகிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். நிகழ்ச்சியில் தொகுப்பாளர் என்னை அமைச்சர் என தவறு தலாக அழைத்துவிட்டார்.

.

அதை அப்போதே திருத்தி, நான் சட்டமன்ற உறுப்பினர் என தெரிவித்தேன். தமிழக அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறும் சூழல் இல்லை. தமிழக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, ஆலோசனை வழங்கக்கூடிய இடத்தில் தொடர்ந்து இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்

X