அம்மன் கோவில்களில் பொங்கல் திருவிழா

அம்மன் கோவில்களில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
அம்மன் கோவில்களில் பொங்கல் திருவிழா
Published on

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அருகே உள்ள வனமூர்த்திலிங்காபுரம் காளியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. முதல் நாள் கரகம் எடுத்தல், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 2-வது நாளில் முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல பேர் நாயக்கன்பட்டியில் தவசியப்பன் கோவில், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ராமநாதபுரத்தில் காளியம்மன் கோவில், கொம்மங்கிபுரம் காளியம்மன் கோவில், புல்லக்கவுண்டன்பட்டி காளியம்மன் கோவில், கண்ணக்குடும்பன்பட்டியில் வடகாசி அம்மன் கோவில், அச்சங்குளத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com