மீன் கழிவு நிறுவனங்களை மூடாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: பொட்டலூரணி கிராம மக்கள் முடிவு

பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் 2 உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
மீன் கழிவு நிறுவனங்களை மூடாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: பொட்டலூரணி கிராம மக்கள் முடிவு
Published on

தூத்துக்குடி மாவட்த்தில் உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள 3 மீன் கழிவு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற ஊர்க் கூட்டத்தில், பின்வரும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப் பகுதியில் உள்ள 3 மீன் கழிவு நிறுவனங்களையும் உடனடியாகவும், நிரந்தரமாகவும் மூட வேண்டும். போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது பதியப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும். தூத்துக்குடி-நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் இடைநில்லாப் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து, சாதாரணப் பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அனைத்துப் பேருந்துகளும் பொட்டலூரணி விலக்கில் நின்று செல்ல வேண்டும்.

மின்விளக்கு வசதி: காட்டுப் பகுதியில் உள்ள பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு உயர்கோபுர மின்விளக்குகளை அமைக்க வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியிலிருந்து பொட்டலூரணி கிராமத்தைப் பிரித்து, தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்.

தேர்தல் புறக்கணிப்பு குறித்த இந்த முடிவை மாநில கவர்னர், தலைமைச் செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட 22 முக்கிய அதிகாரிகளுக்கு தபால் மூலம் மனுவாக அனுப்பியுள்ளனர். இந்தத் தகவலைப் பொட்டலூரணி மீன் கழிவு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com