நாளை மின்தடை

புதுப்பட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
நாளை மின்தடை
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துராமலிங்கபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.க்ஷ

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com