சிறை கொலை வழக்கு: அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மறுத்த சபரிவர்மனின் குடும்பத்தினர்!

சபரிவர்மன் வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் ஆறுதல் தெரிவித்தனர்.
சிறை கொலை வழக்கு: அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மறுத்த சபரிவர்மனின் குடும்பத்தினர்!
Published on

நாகர்கோவில் ,

சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மனின் மனைவி அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மறுத்ததால், ஆறுதல் கூறி விட்டு அமைச்சர்கள் திரும்பினர்.

சிறையில் கொலை

நாகர்கோவில் சிறையில் வியாபாரியான சபரிவர்மன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 சிறை வார்டன்கள், 8 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை, குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை உறவினர்கள் வலியுறுத்தினர். அதனை நிறைவேற்றும் வரை சபரிவர்மனின் உடலை வாங்க மாட்டோம் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர்.

அரசு வேலையை ஏற்க மறுப்பு

இந்தநிலையில் நேற்று இரவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் கலெக்டர் பிரதாப், போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் சபரிவர்மன் வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய மனைவி ஆனந்தவல்லி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது அரசு வேலை, ரூ.10 லட்சத்துக்கான நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் சபரிவர்மனின் உடலை வாங்க வேண்டும் என்றனர். ஆனால் அதற்கு சபரிவர்மனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்தனர். அதாவது பிரேத பரிசோதனைக்கான வீடியோ காட்சிகளை எங்களுக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் காண்பித்து பிரேத பரிசோதனை பற்றிய சந்தேகத்தை தீர்த்து கொள்வோம். அதுவரை அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மாட்டோம் என்றனர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் அங்கிருந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com