சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 27 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு விளையாடினர்.
பரிசளிப்பு விழா
Published on: 

சென்னை,

சென்னை அடுத்த புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 91- வது பிறந்த நாள் முன்னிட்டு கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

கைப்பந்து போட்டிகள்

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 27 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு விளையாடினர். இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மாலை சென்னை வாழ் நாடார்கள் சங்க பொருளாளர் கே. எம். செல்லதுரை தலைமையில் நடைபெற்றது.

பள்ளி முதல்வர் பி. என். அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். அறக்கட்டளை பொருளாளர் ராஜாமணி முருகேச பாண்டியன் துணை தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரிசளிப்பு விழா

விழாவில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். ஜே. ஜான் கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இதில் முதல் பரிசு தங்க கேடயம் மற்றும் ரொக்க பரிசு இரண்டாம் பரிசு வெள்ளி கேடயம் மற்றும் ரொக்க பரிசு மூன்றாம் பரிசு வெண்கல கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டன.

விழாவில் சென்னைவாழ் நாடார்கள் சங்கத் தலைவர் டி தங்கமுத்து பொதுச்செயலாளர் ஆர். செல்வகுமார் செயலாளர் டாக்டர் சி. ஆறுமுகசாமி கல்வி குழு உறுப்பினர் வி. டி. சி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளி துணை முதல்வர் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார் நிகழ்ச்சிகளை உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் ஒருங்கிணைத்தார் ஆசிரியைகள் பிரவீனா, ஜாய் ஞானபுஸ்பம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com