சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு பரிசு

சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு பரிசு
Published on

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நேற்று முன்தினம் ஜோலார்பேட்டையில் நடந்தது. இதில் 328 மாணவர்களும், 218 மாணவிகளும் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளில் 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டு முதல் 10 இடங்களை பெற்ற 60 மாணவ, மாணவிகள் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவகத்தில் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி 60 மாணவ மாணவிகளுக்கு பரிசுதொகையை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com