சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்!

சொத்து வரி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்!
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பரவும் செய்தி

பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.

உண்மை என்ன ?

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி அளித்துள்ள விளக்கத்தில், "சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, சொத்துவரி செலுத்துவோருக்கு மட்டுமே சுய-அறிவிப்பு (Self-Declaration) / உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com