வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் - 2 பேர் கைது

வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் - 2 பேர் கைது
Published on

சென்னை வளசரவாக்கம் லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடைபெறுவதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த குடியிருப்பில் சோதனை நடத்தியபோது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.

இதையடுத்து அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்திய திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கல்யாணகுப்பம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மதன்குமார் (வயது 37), கண்டிகை பகுதியை சேர்ந்த ரமேஷ் (36) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விபசாரத்தில் தள்ளப்பட்டிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com