புதிய தமிழகம் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

70 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்தார்.
புதிய தமிழகம் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on

சென்னை,

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றிருந்தது. சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி விலகியது.

மேலும், 70 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்தார். அதன்படி, கடந்த 29ம் தேதி முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கிருஷ்ணசாமி அறிவித்தார். இதில் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், 43 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி இன்று அறிவித்துள்ளார்.

43 தொகுதிகளுக்கான புதிய தமிழகம் வேட்பாளர்கள் விவரம்:-

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com