சென்னையில் நேற்றைய அளவுக்கு மழை தீவிரமாக இருக்காது - தனியார் வானிலை ஆய்வாளர்

பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்றைய அளவுக்கு மழை தீவிரமாக இருக்காது - தனியார் வானிலை ஆய்வாளர்
Published on: 

சென்னை:

சென்னை உள்பட வடமாவட்டங்களில் இன்று (அக். 18) இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வானிலை தகவலில் கூறியிருப்பதாவது:-

சென்னை உள்பட வடமாவட்டங்களில் இன்று இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தீவிரமாக இருக்காது...

இருப்பினும், நேற்று பெய்த மழையைப் போன்ற தீவிரம் இன்றைய மழையில் இருக்காது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதே நேரத்தில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

எனவே, பொதுமக்கள் வானிலை நிலவரத்தைக் கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com