தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ரேசன் பொருட்கள் விநியோகம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் அக்டோபர் மாதத்திற்கான முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளான 70 வயதிற்கு மேற்பட்ட வயதான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அவர்களது குடிமைப்பொருட்கள் நாளை (5.10.2025, ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (6.10.2025, திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்களில் அந்தந்தப் பகுதிகளுக்குரிய நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்கள் மூலம் அவர்களது வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யப்படும். இத்திட்ட பயனாளிகள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






