பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரவிக்குமார் எம்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்டக் கல்வி நிலையை உயர்த்துவதற்கு அமைச்சர் எடுத்துக்கொண்டுள்ள அக்கறைக்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரவிக்குமார் எம்.பி.
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தின் பள்ளிக்கல்வித் துறை சரிவு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தின் பள்ளிக் கல்வியில் ஏற்பட்டிருக்கும் சரிவு குறித்து காலையில் எக்ஸ் தளத்தில் நான் போட்டிருந்த பதிவைப் பார்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று விடுமுறை நாள் என்றாலும் உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பேசியதோடு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். அந்தத் தகவல்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடமும் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டக் கல்வி நிலையை உயர்த்துவதற்கு அமைச்சர் எடுத்துக்கொண்டுள்ள அக்கறைக்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com