சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி மர்மான முறையில் உயிரிழப்பு; சிறை வார்டர் பணி இடைநீக்கம்

சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
accused death
Published on

சேலம்,

சேலத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்."

அடைக்கப்பட்டிருந்த கைதி சிறையில் இருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விசாரணை நடத்தப்பட்டது

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி சிறைக்கு சென்றார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக சிறை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், கைதியுடன் தொடர்பில் இருந்த சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பணி இடைநீக்கம்

விசாரணையில், சம்பவம் நடந்த நாளில் சிறை வார்டர் ஒருவர் மதுபோதையில் பணியில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கைதி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com